அமைச்சர் தம்பி வீட்டில் நடந்த ED ரெய்டு குறித்து வெளியான பரபரப்பு தகவல்கள்

Update: 2025-04-08 04:52 GMT

கே.என்.நேருவின் சகோதரர் மணிவண்ணன் இல்லத்திலும் அமலாக்கத்துறை ரெய்டு

கோவை மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் மணிவண்ணன் இல்லத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மணிவண்ணன் தங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடைபெறுகிறது. சட்டவிரோத பணமோடி நடவடிக்கைகள் தொடர்பாக இந்த சோதனை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், மணிவண்ணன் கவனித்து வரும் கட்டுமான நிறுவனம், ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை முறையாக செலுத்தவில்லை எனவும், அரசாங்கத்திற்கு நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி தொகையை தவறாகக் கையாண்டதாகவும் கூறப்படுகிறது


Tags:    

மேலும் செய்திகள்