மவுனம் அனைத்தும் நன்மைக்கே என அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். சமீபத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லி சென்றது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், டெல்லி பயணம் தொடர்பாக ஈரோடு ரயில் நிலையத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,,, மவுனம் அனைத்தும் நன்மைக்கே என செங்கோட்டையன் பதிலளித்துச் சென்றார்.