வைரலாகும் சீமானின் பரபரப்பு ஆடியோ

Update: 2025-04-19 05:51 GMT

சென்னை கே.கே.நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார். அப்போது பேசிய அவர், 2026 சட்டமன்றத் தேர்தலில் நான் சொல்பவர்கள் மட்டுமே வேட்பாளர்கள் என திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும், தன் பேச்சுக்கு மாறாக தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால் விஜய் கட்சிக்கு சென்று விடுங்கள் நானே சேர்த்து விடுகிறேன் என்றும் சீமான் நிர்வாகிகளிடம் கூறிய ஆடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்