சீமான் விவகாரத்தில் நடிகைக்கு பெருகும் ஆதரவு - வீரலட்சுமி ரிலீஸ் செய்த வீடியோவால் பரபரப்பு
நடிகைக்கு ஆதரவாக தமிழர் முன்னேற்றப்படை கட்சி சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இருப்பதாக அக்கட்சியின் தலைவர் வீரலட்சுமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், அந்த நடிகைக்கு ஆதரவாக, தமிழ்நாட்டில் பல பெண் தலைவர்கள் குரல் கொடுத்திருக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.