சென்னை சென்ட்ரல் அருகே உள்ள விக்டோரியா அரங்கை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் புனரமைப்பு பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, திரௌபதி அம்மன் கோவிலை வைத்து சிலர் அரசியல் நாடகம் நடத்துவதாக சேகர்பாபு குற்றம் சாட்டினார். மேலும், திரௌபதி அம்மன் கோவில் ஒருவார காலத்தில் திறக்கப்பட்டு, பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.