காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் ராமதாஸ்

Update: 2025-07-16 06:25 GMT

ஒட்டு கேட்கும் கருவி விவகாரம் - ராமதாஸ் தரப்பில் புகார்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லத்தில் ஒட்டுக்கேட்கும் கருவியை வைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, ராமதாஸ் தரப்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, பாமக தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கிளியனூர் காவல் நிலையத்திற்கு வருகை தந்து புகார் அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்