DMDK | Rajya Sabha | தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் சீட் - தொடரும் இழுபறி
தேமுதிகவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் சீட் வழங்கப்படுவது தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. கடந்த மக்களவை தேர்தலில், அதிமுக கூட்டணியில் இணைந்து தேமுதிக தேர்தலை சந்தித்தது. அப்போது ஒரு மாநிலங்களவை சீட் தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினார். தற்போது மாநிலங்களவை சீட் ஒதுக்கீடு தொடர்பான கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் எல்.கே. சுதீஷ் இருவருமே பதில் அளிக்க மறுத்துள்ளனர்.