பொதுமக்களின் கோரிக்கை - சைக்கிளில் ஆய்வு செய்த எம்.பி தங்க தமிழ்செல்வன் | DMK | Thanga Tamil Selvan
தேனி மாவட்டம் கூடலூர் அருகே வனப்பகுதி அருகே உள்ள கோயில் திருவிழா நடத்த வனத்துறையினர் தடை விதித்துள்ள நிலையில், திருவிழா நடத்த அனுமதி வேண்டி பொதுமக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வனிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், பொது மக்களின் கோரிக்கையை ஏற்ற அவர், சைக்கிளில் பயணமாக வந்து மேகமலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள சுருளியாறு மின்வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த முத்து மாரியம்மன் கோயில் அருகே ஆய்வு மேற்கொண்டது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் , திருவிழா நடத்துவது குறித்து மாவட்ட வனத்துறை அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து உரிய முடிவுகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.