பிரதமர் நிகழ்ச்சி.. `கலந்து கொள்ளாதது ஏன்’ - முதல்வர் விளக்கம்

Update: 2025-04-06 11:25 GMT

தொகுதி மறுசீரமைப்பால் தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்கள் பாதிக்கப்படாது என்ற உறுதிமொழியை தமிழ்நாட்டு மண்ணில் நின்று பிரதமர் நரேந்திர மோடி வழங்க வேண்டுமென, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதுகுறித்த அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தை நாடாளுமன்றத்திலும் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பிரதமரின் ராமேஸ்வரம் விழாவில் தன்னால் பங்கேற்க முடியாதது குறித்து பிரதமரிடம் ஏற்கனவே தெரிவித்துவிட்டதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்