சாதிய விஷத்தை கக்குபவர்களை.." - காங். மீது பிரதமர் மோடி காட்டமான விமர்சனம்..

Update: 2025-11-16 02:46 GMT

எதிர்க்கட்சிகள் தங்கள் தோல்விக்கான காரணம் குறித்து விளக்க முடியவில்லை என்பதால், தேர்தல் ஆணையத்தை குறை கூறுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜாராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், சாதிய விஷத்தை கக்குபவர்களை மக்கள் நிராகரித்து விட்டார்கள் என்பதை பிஹார் தேர்தல் காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார் மேலும், காங்கிரஸ் முஸ்லிம் லீக்-மாவோயிஸ்ட் காங்கிரஸ் கட்சியாக மாறிவிட்டது என விமர்சித்துள்ள பிரதமர் மோடி, எதிர்க்கட்சியினர் தங்கள் சொந்தக் கட்சி உறுப்பினர்களிடம் கூட தோல்விக்கான காரணத்தை விளக்க முடியவில்லை என்பதால், வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேர்தல் ஆணையம், எஸ்ஐஆர் ஆகியவற்றைக் குறை கூறுவதாக குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்