S.I.R. குறித்து தேர்தல் ஆணையம் தான் உறுதியான நிலைப்பாட்டை எடுத்து ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்த வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற அக்கட்சியின் பூத் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்பதற்காக மதுரை விமான நிலையம் வந்திருந்த அவர், மூன்றாம் கட்ட சுற்றுப்பயணம் மதுரையில் இருந்து ஆரம்பித்து டிசம்பர் 2ம் தேதி வரை நடைபெற உள்ளதாக தெரிவித்தார். மேலும், தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளை உணவளிப்பதால் மட்டும் அவர்களின் தேவை பூர்த்தி ஆகாது எனவும், அரசு அவர்களின் தேவைகளை நிச்சயமாக செய்து தரவேண்டும் எனவும் கூறினார்.