அரசு ஊழியர்களுக்கு பொள்ளாச்சி ஜெயராமன் வேண்டுகோள் | alanganallur jallikattu 2025

Update: 2025-01-18 06:05 GMT

அரசு ஊழியர்கள், தங்களுக்கென்று ஒரு மதிப்பு, மரியாதையை வைத்துக்கொள்ள வேண்டும் என்று அதிமுக முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார். பொள்ளாச்சி அருகே உள்ள முள்ளுப்பாடியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியின்போது, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதியின் நண்பனை அமர வைப்பதற்காக, ஆட்சியரை எழுப்பக் கூடிய அலங்கோலமான ஆட்சி நடைபெறுகிறது என்று விமர்சித்தார். இது மன்னராட்சிதான் என்பது உறுதியாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்