Dindugal | Governor RN Ravi |ஆளுநர் பாதுகாப்பு பணியின்போது போதையில் தள்ளாடிய காவலர்-வைரலாகும் வீடியோ
கொடைரோடு பகுதியில் ஆளுநர் வருகைக்காக பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் ஒருவர் மது போதையில் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என் ரவி பங்கேற்கிறார். இந்த நிலையில், மதுரை வரை விமானத்தில் வந்த ஆளுநர், சாலை மார்க்கமாக கொடைக்கானலுக்கு சென்றார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் மதுபோதையில் தள்ளாடிக் கொண்டிருந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.