ஆர்எஸ்எஸ் நிறுவனர் ஹெட்கேவர் நினைவிடத்தில் பிரதமர் மரியாதை

Update: 2025-03-30 11:02 GMT

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக மகாராஷ்டிரா சென்ற பிரதமரை, நாக்பூர் விமான நிலையத்தில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் வரவேற்றனர். இதையடுத்து, ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் கேசவ் பலிராம் ஹெட்கேவர் நினைவிடத்தில் பிரதமர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உடனிருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்