இரு ஆண்டுகளுக்கு முன் விமான நிலையம் அமைப்பதற்காக
பரந்தூர் தேர்வு செய்யப்பட்டதை சாதனையாக கொண்டாடிய
திமுக அரசு, இப்போது பழியை முந்தைய அரசு மீது போட முயல்வவதாக பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார். இது பற்றி அவர் வெளியிட்ட அறிக்கையில் திமுகவின் நிலைபாடு கண்டிக்கத்தக்கது என்றும் இது அப்பட்டமான இரட்டை வேடம் எனக் கூறியுள்ளார். 2022 ஆகஸ்ட் 2ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், புதிய விமான நிலையம் அமைக்க தகுதியான இடத்தை தேர்வு செய்யும் பணியை டிட்கோ மூலம் தமிழக அரசு மேற்கொண்டதாக கூறியிருந்ததை
சுட்டுக் காட்டியுள்ளார். திருப்போரூரில் விமான நிலையத்தை அமைக்க கோரியுள்ளார்.