``வீட்டில் நாய், பூனை வளர்த்தால் வரி போடுவதா?’’ - கொதித்த செல்லூர் ராஜு | Pets | Sellur Raju | ADMK
வரும் காலங்களில் சாலையில் மக்கள் நடந்து சென்றால் கூட வரி விதிப்பார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை ஒட்டி, மதுரை மாகப்பூ பாளையம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தற்போது, வீட்டில் வளர்க்கும் நாய், பூனைகளுக்கு கூட வரி விதிக்கப்பட்டுவதாக குற்றம்சாட்டினார். திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சாலையில் நடந்து சென்றால் கூட வரி விதிப்பார்கள் என்றும் அவர் கூறினார்.