TVK Sengottaiyan | செங்கோட்டையன் படத்துடன் போராட்டம் | ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ. சொன்ன காரணம்

Update: 2025-11-27 13:37 GMT

தவெக-வில் இணைந்த செங்கோட்டையனின் புகைப்படத்துடன் கூடிய பேனர் உடன் மதுரையில் ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏ. உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

உசிலம்பட்டியில் மின்மாற்றிகளை மாற்றி அமைக்கக் கோரி மின்வாரிய அலுவலகம் முன்பு ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏ. அய்யப்பன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டப் பந்தலில் கட்டப்பட்டிருந்த பேனரில் ஓ.பி.எஸ்., சசிகலா, டிடிவி தினகரன் உடன் தவெக-வில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் படமும் இடம்பெற்றிருந்தது.

இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த எம்.எல்.ஏ. ஐயப்பன், பேனர் ஏற்கெனவே அச்சிடப்பட்டது, செங்கோட்டையன் தவெக-வில் இணைந்தது குறித்து தங்களுக்கு தெரியாது என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்