`ஆப்ரேஷன் சிந்தூர்' - விளக்கம் அளித்த நயினார் நாகேந்திரன்

Update: 2025-05-08 01:52 GMT

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் வெற்றிவேல், வீரவேல் ஆபரேஷன் நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாகிஸ்தான் மீதான தாக்குதல் நடவடிக்கைக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். மேலும், ஆப்ரேஷன் சிந்தூர் என்பதற்கு விளக்கம் அளித்த அவர், அதை போன்றே 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, பாஜக சார்பாக வெற்றிவேல், வீரவேல் ஆபரேஷன் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்