`பாகிஸ்தானின் கொட்டத்தை அடக்கிய ஆபரேஷன் சிந்தூர்' - NDA கூட்டத்தில் தீர்மானம்

Update: 2025-05-26 02:39 GMT

NDA Meeting | Operation Sindoor | `பாகிஸ்தானின் கொட்டத்தை அடக்கிய ஆபரேஷன் சிந்தூர்' - NDA கூட்டத்தில் பிரதமரை பாராட்டி தீர்மானம்

தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்களின் கூட்டம் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை சேர்ந்த 20 மாநில முதல்வர்கள் மற்றும் 18 துணை முதல்வர்கள் பங்கேற்றனர். இந்தக்கூட்டத்தில், ஆயுதப்படைகளின் வீரத்தையும், பிரதமர் மோடியின் தலைமையையும் பாராட்டி 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு ஆயுதப்படைகள் மற்றும் பிரதமர் மோடிக்கு முதல்வர்கள் பாராட்டுகளையும் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா, நக்சலைட்டுகளுக்கு எதிராக நடைபெற்று வரும் பிரச்சாரம் குறித்து இந்தக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்