தமிழக முதல்வர் ஸ்டாலின், வருகிற 23ம் தேதி டெல்லி செல்கிறார். நிதி ஆயோக் 10-வது நிர்வாக குழுக் கூட்டம், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் வரும் 24ம் தேதி நடைபெறுகிறது.
இதில் கலந்து கொள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்தக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் 23ம் தேதி மாலை டெல்லி செல்ல உள்ளார்.