Nitin Gadkari | Viral Video| கண்முன் அடித்துக் கொண்ட பெண் அதிகாரிகள் - நிதின் கட்கரியின் ரியாக்ஷன்
மத்திய அமைச்சர் முன்னிலையில் மோதிக்கொண்ட பெண் அதிகாரிகள்
மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் நடந்த அரசு நிகழ்ச்சியின் போது, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி முன்னிலையில் பெண் அதிகாரிகள் இருவர் சண்டையிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாக்பூரில் நடைபெற்ற ரோஜ்கர் மேளா வேலைவாய்ப்பு திட்ட நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் மேடையிலேயே தபால் துறையின் இரண்டு மூத்த பெண் அதிகாரிகள் சண்டையிட்ட நிலையில், அதில் ஒரு அதிகாரியை மற்றொருவர் தாக்கியுள்ளார். மத்திய அமைச்சர் முன்னிலையே இரண்டு பெண் அதிகாரிகள் மோதிக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் பதவி தொடர்பாக இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.