"நேரு எடுத்த தவறான முடிவு..பாதி காஷ்மீர் பாக். வசம்.." -ஆளுநர் ரவி பேச்சு

Update: 2025-07-12 01:52 GMT

"நேரு எடுத்த தவறான முடிவு.. பாதி காஷ்மீர் பாக். வசம்.." - ஆளுநர் ரவி பரபரப்பு பேச்சு

நேரு எடுத்த தவறான முடிவால் பெரும்பான்மையான ஜம்மு காஷ்மீர் பகுதி பாகிஸ்தான் வசம் உள்ளது என்றும், அதற்கான விலையை இன்றும் நாம் கொடுத்து வருகிறோம் என்றும் தமிழக ஆளுநர் ரவி பேசியுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில், பாரதிய ஜனசங்கம் கட்சியின் நிறுவனரும், சுதந்திர இந்தியாவின் முதல் மத்திய தொழில்துறை அமைச்சருமான டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் 125 வது ஆண்டு பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் உரையாற்றிய ஆளுநர், இந்தியாவுக்கு என்றுமே போர் மீது விருப்பம் இல்லை என்றும், ஆனால் நம்மை சீண்டினால் என்ன நடக்கும் என்பதை சமீபத்தில் பாகிஸ்தானுக்கு நாம் உணர்த்தியுள்ளோம் என்றும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்