"நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைக்கு ரூ.40 லஞ்சம்" - நயினார்
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு தலா 40 ரூபாய் கமிஷன் பெறப்படுவதாக மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 17 சதவீதமாக உள்ள நெல் கொள்முதல் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு குழுவை அனுப்பி உள்ளதாகவும், அதற்காக பரிந்துரை செய்ய தாம் நேரடியாக அங்கு செல்வதாகவும் கூறினார்.