தமிழகத்திற்கு மன்னராட்சி தேவையில்லை என்றும் மக்களாட்சி தான் வேண்டும் எனவும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தர்மபுரியில் தெரிவித்துள்ளார். பெரிய குறும்பட்டி, மாதுப்பட்டியில் காளியம்மன் கோவிலில் கிராம மக்களை சந்தித்த பிறகு, நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திமுக ஆட்சியில் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் என அவர்கள் குடும்பத்திலேயே அடுத்தடுத்து முதலமைச்சர் ஆகி கொண்டு இருந்தால் நாட்டு மக்களுக்கு என்ன கிடைக்கும் என அவர் கேள்வி எழுப்பினார்.