ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஓசூரில் நடந்த பேரணியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்டோர் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டனர். அப்போது முப்படைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக மூவர்ண தேசிய கொடியை ஏந்தி பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.இதனை தொடர்ந்து பொதுக்கூட்ட மேடையில் மழையில் நனைந்த படி பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பாடல்களையும் பாடினார்.