"அவர்களுக்கு முஸ்லிம்கள் ஓட்டு போட மாட்டார்கள்" - சர்ச்சையை கிளப்பிய அதிமுக நிர்வாகி
அதிமுக- பாஜக கூட்டணிக்கு முஸ்லிம்கள் ஓட்டு போட மாட்டார்கள் என்று அதிமுக மாநில சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் அப்துல் ஜப்பார் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் அரேப்பாளையத்தில் நடந்த அதிமுக மே தின கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு முதல்வர் பதவி தேடி வந்தும், அவர் அதனை நிராகரித்ததாக குறிப்பிட்டார். மேலும் பாஜக கூட்டணியில் சேர்ந்ததால் அதிமுகவிற்கு அதிகாரம் பலம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.