நீலகிரியில் திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் படுகரின மக்களின் பாரம்பரிய இசைக்கு நீலகிரி MP ஆ.ராசா நடனமாடியுள்ளார். நீலகிரி மாவட்ட திமுக கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். பின்பு திருமண விழாவில் திமுக நிர்வாகிகள் மற்றும் திருமண வீட்டாருடன் இணைந்து ஆ.ராசா பாரம்பரிய இசைக்கு நடனம் ஆடினார். இதனால் மணமக்கள் மற்றும் திருமண வீட்டார் மகிழ்ச்சி அடைந்தனர்