விறுவிறுப்பு அரசியல் களத்தில் பரபரப்பு பதிவை வெளியிட்ட CM. ஸ்டாலின்

Update: 2025-02-21 04:44 GMT

எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உலக தாய்மொழி தினத்தையொட்டி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், இலக்கியங்களில் புதைந்திருந்த வரலாற்றினை மண்ணில் அகழாய்ந்து நிறுவி வருவதாக தெரிவித்துள்ளார். அகத்திலும் புறத்திலும் அன்பும் வீரமும் கொண்டு வாழும் நற்றமிழர் தாய்மொழி, போற்றுதலுக்குரிய பழமை உடைய மொழி மட்டுமல்ல; பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல்கொண்ட செம்மொழி!... உலகெங்கும் பரவட்டும் நம் உயர்தனிச் செம்மொழி... தமிழ் வாழ்க! என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்