"பொருளாதார நெருக்கடி தரவே வக்பு மசோதா" - அமைச்சர் குற்றச்சாட்டு

Update: 2025-03-30 05:59 GMT

வக்ஃப் சொத்திற்கு 30 ஆண்டுகள் காலவரைறை கொடுத்திருப்பது கண்டனத்திற்குரியது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார். புதுக்கோட்டை திருவள்ளுவர் நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, இஸ்லாமிய சொத்துக்களுக்கு கால வரையறை இல்லையென்று என்று கூறினார். ஆனால் தற்போதைய சட்டத்தில் அதற்கு 30 ஆண்டுகள் காலவரையறை நியமித்திருப்பதாக குறிப்பிட்ட அவர், தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்