Minister EV Velu | "மதுரையில் போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு " - அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு
மதுரை கோரிப்பாளையம் பாலம் வரும் ஜனவரியில் திறக்கப்படும் என சட்டப் பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். கேள்வி நேரத்தின்போது பேசிய அதிமுக எம்எல்ஏ செல்லூர் ராஜு, மதுரையில் நிலவும் போக்குவரத்து நெரிசல் பிரச்னையை சுட்டிக்காட்டினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் எ.வ.வேலு, மதுரையில் போக்குவரத்து பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் கட்டப்படும் கோரிப்பாளையம் பாலம் ஜனவரியிலும், அப்போலோ மருத்துவமனை பாலம் நவம்பரிலும் திறக்கப்படும் என தெரிவித்தார்.