மதுரை அருகே எம்.ஜி.ஆர் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு முன்னாள் மேயர் சைதை துரைசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இன்றும் கண்ணுக்குத் தெரியாத மின்சாரமாக மக்களிடையே எம்ஜிஆர் வாழ்ந்து வருவதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அவர், ஏழைகளின் இதய தெய்வமான எம்.ஜி.ஆர் சிலையை சேதப்படுத்திய சமூக விரோதிகள் யாராக இருந்தாலும் உடனே கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.