``அதை செய்யாமல் திமுகவை தோற்கடிக்க முடியாது’’ - கிருஷ்ணசாமி கொடுக்கும் ஐடியா
கூட்டணி ஆட்சிக்கு தயாராக இல்லாமல் திமுக கூட்டணியை யாராலும் தோற்கடிக்க முடியாது என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக கூட்டணியை அகற்ற வேண்டும் என்றால், வலுவான கூட்டணி, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற பரந்த மனப்பான்மை அவசியம் என்று கூறினார்.