``கேரளா மாறிவிட்டது’’ - லிஸ்ட்டில் இருந்து அதிரடியாக நீக்கிய உள்துறை

Update: 2025-04-28 03:42 GMT

தீவிர மாவோயிஸ்ட் இல்லாத மாநிலமாக கேரளா மாறிவிட்டதாக உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், மாவோயிஸ்ட் பாதிப்புக்குள்ளான பகுதிகளின் பட்டியலிலிருந்து கேரளா மாநிலம் நீக்கப்பட்டுள்ளது. அதன்படி,

வயநாடு, மலப்புரம், பாலக்காடு மற்றும் கண்ணூர் மாவட்டங்கள், இந்த பட்டியலில் இருந்து விலக்கப்பட்டன. கடந்த பத்து ஆண்டுகளாக மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக, கேரளா மத்திய நிதியைப் பெற்று வந்த நிலையில், இனி அதில் நிதி குறைப்பு ஏற்படும் என்று தெரிகிறது. இருப்பினும், மாவோயிஸ்ட் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் போலீசாரின் கண்காணிப்பு பணி தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்