அதிமுக டிரம்புடன் கூட கூட்டணி வைக்க வாய்ப்புள்ளது என கார்த்தி சிதம்பரம் கருத்து
காமராஜர் குறித்த சர்ச்சை பேச்சிற்கு, திருச்சி சிவா விளக்கமளித்துள்ள நிலையில், அந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், சரித்திர பிரச்னைகள் தற்போதைய காலகட்டத்தில் தேவையற்றது எனவும், மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், வருகின்ற தேர்தலில் அதிமுக டிரம்பின் கட்சியுடன் கூட கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாகவும் விமர்சித்தார்.