"தமிழகத்தில் தேர்தல் வந்தால் கச்சத்தீவு பிரச்சனையும் வந்துவிடும்"
கச்சத்தீவு பிரச்சினையை வைத்து தமிழகத்தில் வாக்கு வேட்டை அரசியல் நடத்தப்பட்டு
வருவதாக இலங்கை அமைச்சர் ராமலிங்க சந்திரசேகர் விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் வருவதாக இருந்தால், அதனோடு சேர்ந்து கச்சத்தீவு பிரச்சினையும் வந்துவிடும் என்றும் ஆனால் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதை உலகம் அங்கீகரித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.