"எங்க கிட்ட ஆட்சியை குடுத்து பாருங்க.. ஆறே நாளுல.." - அடித்து சொன்ன அன்புமணி
"ஆட்சியை கொடுத்தால், 6 நாட்களில் போதைப்பொருளை ஒழிப்பேன்"
தமிழக அரசு விவசாயிகளை கண்டு கொள்வதில்லை எனவும், நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் பெறப்படுதாகவும் பாமக தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தின் போது பேசிய அவர், திமுக அரசு விவசாயிகளை ஏமாற்றுவதாகவும், தன்னிடம் ஆட்சி அளிக்கப்பட்டால், 6 நாட்களில் போதைப் பொருள்களை ஒழித்துவிடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.