EPS | BJP | "RSS குரலாக EPS மாறி வருகிறார்" இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வீரபாண்டியன் ஆவேசம்
ஆர்.எஸ்.எஸ்- இன் குரலாக ஈ.பி.எஸ் மாறி வருவது அதிர்ச்சியளிக்கிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தங்கள் கட்சிக்கு தேர்தலில் கூடுதலாக இடங்களை ஒதுக்கீடு செய்யுமாறு தமிழக முதல்வரிடம் கேட்போம் என்றும், அதை அவரும் தோழமையின் கோரிக்கையாக எடுத்துக் கொள்வார் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.