தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கான மூவாயிரத்து 300 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு விடுவித்தவுடன், பயனாளிகளுக்கான ஊதியம் வழங்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட அவர், 12 ஆயிரத்து 525 ஊராட்சிகளில் தேசிய வேலை உறுதித் திட்டத்தின் கீழ், ஒரு கோடியே 9 லட்சம் தனிநபர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில், ஊதிய நிலுவை இரண்டாயிரத்து 400 கோடி ரூபாய் உட்பட 3,300 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு விடுவிக்காததால், பயனாளிகளுக்கு தொகை வரவு வைக்கப்படாமல் உள்ளதாக அவர் விளக்கமளித்தார்.