சனாதனம் தொடர்பாக, அமைச்சர் சேகர்பாபு - அதிமுக உறுப்பினர் கே.பி.முனுசாமி இடையே சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது. இறைபக்தி வாழைப்பழம் என்றால், சனாதனம் வாழைப்பழ தோல் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட கே.பி.முனுசாமி, அமைச்சர் சொல்லும் உவமை முழுமையாக தவறு என்றார். சனாதனத்திற்கும் இறைவனுக்கும் மிகப்பெரிய வேறுபாடுகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.