"2026 தேர்தலில் கூடுதல் தொகுதிகளை கேட்போம்" - ம.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம்
2026 தேர்தலில் கூடுதல் தொகுதிகளை கேட்போம் - ம.தி.மு.க
2026 சட்டமன்றத் தேர்தலில் கூடுதல் தொகுதிகளை கேட்டு போட்டியிட வேண்டுமென, ம.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மதிமுகவின் 31-வது பொதுக்குழுக்கூட்டம் ஈரோடு மாவட்டம் திண்டல் அருகேயுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
மதிமுக அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜூன்ராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, முதன்மை செயலாளர் துரை வைகோ, மல்லை சத்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
2026 தேர்தலில், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெறுவதற்கு ஏதுவாக தி.மு.க.விடம் கூடுதல் தொகுதிகளை பெற்று போட்டியிட வேண்டும்....முழு மதுவிலக்கு என்பதை நடைமுறைப்படுத்தும் விதமாக, படிப்படியாக டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என்பன உள்ளிட்ட 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.