"4 ஆண்டுகளில் மருத்துவத் துறையில் 25,295 பேர் பணி நியமனம்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மருத்துவத் துறையில் 25 ஆயிரத்து 295 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சட்டப் பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பதிலுரை வழங்கி பேசிய அவர், இதைத் தெரிவித்தார்.