``அதிகாரம் இல்லனா; கைவச்சிருவீங்களா..'' அனகாபுத்தூர் விவகாரம் - சீமான் கடும் ஆவேசம்
ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து மனச்சான்று உள்ளவர்கள் பதிலளிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னை பல்லாவரம் அருகே அனகாபுத்தூரில் நீர்நிலைகளை ஆக்கிரமித்ததாக கூறி 500 வீடுகளை போலீசார் பாதுகாப்புடன் அதிகாரிகள் அகற்றினர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பங்களை சீமான் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆக்கிரமிப்புகள் என்று கூறி ஏழை மக்களின் வீடுகளையே மட்டும் குறிவைத்து அகற்றுவது நீதியா? என்றும் சீமான் தெரிவித்தார்.