"நான் யானை அல்ல..குதிரை..டக்குனு எழுவேன்.." |திரும்பி பார்க்க வைத்த செந்தில் பாலாஜி குறித்த போஸ்டர்
நான் யானை அல்ல குதிரை என்று வாசகத்துடன், படையப்பா பட ரஜினி உடையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை சித்தரித்து கோவையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் ஜாமின் வேண்டுமா? பதவி வேண்டுமா? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில், செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் படையப்பா பட ரஜினி உடையில் செந்தில் பாலாஜி படத்துடன் "நான் யானை அல்ல... குதிரை... டக்குனு எழுவேன்..." என்ற வாசகங்களுடன் கோவையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன...