ஆளுநர் வழக்கில் பிரமாண்ட வெற்றி - 4 வக்கீல்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த CM

Update: 2025-04-25 10:19 GMT

ஆளுநர் மசோதா ஒப்புதல் விவகாரத்தில்,

உச்சநீதிமன்றத்தில் வாதாடி தமிழக அரசுக்கு வெற்றியைத் தேடித்தந்த வழக்கறிஞர்களுக்கு, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தேநீர் விருந்து அளிக்க உள்ளார். மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி, அபிஷேக் சிங்கவி, ராகேஷ் திவேதி, வில்சன் ஆகியோருக்கு, சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில், வரும் 27ம் தேதி தேநீர் விருந்து அளிக்கப்படுகிறது. வழக்கு விசாரணையின்போது, உச்சநீதிமன்ற நீதிபதிகள், உச்சநீதிமன்றத்துக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டதாக அறிவித்தனர். குறிப்பாக, அந்த மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட நாளிலேயே அவற்றுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுவிட்டதாக கருதுவதாக தீர்ப்பில் கூறியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்