வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்பு - BJP சார்பாக மனமார வரவேற்ற Nainar Nagendran

Update: 2025-05-29 02:23 GMT

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நியாயம் கிடைத்துள்ளதாக, தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ஞானசேகரன் குற்றவாளி என்பதை உறுதிப்படுத்திய சென்னை மகளிர் நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பை மனதார வரவேற்று மகிழ்வதாக கூறினார். பெண்கள் தைரியமாக தங்களுக்கு நேரும் கொடுமைகள் குறித்து புகார் அளிக்க, இதுபோன்ற தீர்ப்புகள் துணை நிற்கும் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்