தமிழகத்தில் காலியாக உள்ள 10 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். விருதுநகரில் நடைபெற்ற தலைமை ஆசிரியர் ஆய்வுக்கூட்டத்தில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இனி ஆசிரியர் தகுதித் தேர்வுகள் காலதாமதமின்றி நடத்தப்படும் என்றும், முழுமையான ஆசிரியர் பணியிடங்கள் ஒன்றரை ஆண்டுகளில் நிரப்பப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.