தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜயின் பிறந்தநாளையொட்டி, விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 15 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளிக்கப்பட்டது. கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த், ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கினார். ஒவ்வொரு குழந்தையின் விரலிலும் மோதிரத்தை அணிவித்து தாய்க்கு வாழ்த்து தெரிவித்தார். பிறந்த குழந்தைகளுக்கான உடைகள், அழகு சாதன பொருட்களும் வழங்கப்பட்டன.