பாஜகவுடன் கூட்டணி என்பது தற்கொலை செய்து கொள்வதற்கு சமம் என அதிமுக மகளிர் அணி துணை செயலாளரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கன்னியாகுமரி சென்ற அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தமிழ்நாட்டிற்கு தேவையற்ற கட்சி பாஜக எனவும், அதனுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம் எனவும் தெரிவித்தார். மேலும், அதிமுக தலைமை அனுமதி அளித்தால் விஜய்யை எதிர்த்து போட்டியிடுவேன் என அவர் தெரிவித்தார்.