கேஸ் விலை உயர்வு...! எரிய வேண்டியது அடுப்பா..? வயிறா..? - முதல்வர் கண்டனம்
மத்திய பாஜக அரசு ஏதாவது ஒரு தேர்தல் வரும் வரை காத்திருக்காமல், சமையல் எரிவாயு விலையை குறைக்க வேண்டும் என்று, முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், நாட்டு மக்களின் வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது அவர்களது வயிறு எரிய வேண்டுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல், சமையல் எரிவாயு விலை உயர்வு அமைந்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ள அவர், அடாவடியாக விலையை உயர்த்திவிட்டு, தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதில் சிறு பகுதியைக் குறைத்து நாடகம் ஆடுவது பாஜகவின் வழக்கமாகி விட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்