"அரசுப் பள்ளியில் இருந்து விண்வெளி உச்சி.." இஸ்ரோ தலைவரை நேரில் சந்தித்து பாராட்டிய முதல்வர்
முதலமைச்சர் ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் இஸ்ரோ தலைவர் டாக்டர் வி. நாராயணன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் சதீஷ்தவன் மைய இயக்குநர் ராஜராஜன், இஸ்ரோ இயக்குநர் முத்துவேல் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இது குறித்து முதலமைச்சர் தனது வலைதளத்தில், தமிழக அரசுப் பள்ளியில் இருந்து விண்வெளி உச்சிக்குச் சென்ற பயணம் பெருமை அளிக்கிறது என்றும், பொதுக் கல்வியால் எட்டக்கூடிய உயரங்களை இவர்கள் நிரூபித்துள்ளனர் என்றும் பதிவிட்டுள்ளார்.